நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!

3 hours ago 6
ARTICLE AD BOX

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மீண்டும் கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கும் திரிஷா, இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

இதையும் படியுங்க: போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

இவர் நடித்து வரும் தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், கமல், சிம்பு, திரிஷா, அபிராமி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

நேற்று இந்த படத்தின் ஆடியே வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அழகு சிலை போல திரிஷா வந்தது அனைவரையும் வியக்க வைத்தது. குறிப்பாக 41 வயதில் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என ரசிகர்கள் மெய்சிலிர்த்தனர்.

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் சிம்புவுக்கு 42 வயதாகிறது. இவருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில்தான் நேற்று நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற புகைப்படத்தை திரிஷா தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டார்.

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், பேசாமல் நீங்களும் சிம்புவும் கல்யாணம் பண்ணிக்கோங்க என பதிவிட்டுள்ளார். இவரது கோரிக்கைக்கு பலரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.

ரெண்டு பேருமே பெரிய ஸ்டார்ஸ், ஜோடி பிரமாதமும் சூப்பர். ஏன் கல்யாணம் பண்ணிக்க்கூடாது என நெட்டிசன்கள் பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Just marry Simbu.. Fans Request to Trisha நீங்க பேசாம சிம்புவை கல்யாணம் பண்ணிக்கோங்க… திரிஷாவுக்கு வந்த திடீர் கோரிக்கை!
  • Continue Reading

    Read Entire Article