நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்! 

1 week ago 17
ARTICLE AD BOX

நினைத்ததை முடிப்பவர்

அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும் தீராத ஆசை உண்டு. அவர் சினிமாவிற்கு நடிக்க வந்ததே கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான தொகையை சம்பாதிப்பதற்குத்தான் என்று பலரும் கூறுவது உண்டு.

ajith kumar receive padma bhushan award from president

அதுமட்டுமல்லாது விமான ஓட்டுநருக்கான உரிமத்தை பெற்ற தமிழ்நாட்டின் முதல் நடிகர் அஜித்தான். இது போக துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சிப்பெற்று அதற்கான போட்டிகளிலும் கலந்துகொண்டார். இவ்வாறு இந்திய சினிமாக்களிலேயே மிகவும் தனித்துவமான நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார்.

பத்மபூஷன் அஜித்குமார்…

கடந்த ஜனவரி மாதம் 25 ஆம் தேதி 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பத்ம பூஷன் விருதுகளின் பட்டியலில் அஜித்குமாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இவரைப் போலவே நடிகை ஷோபனாவுக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. 

ajith kumar receive padma bhushan award from president

இந்த நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் நடிகர் அஜித்குமார் நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் பத்ம பூஷன் விருதை பெற்றுக்கொண்டார். அதே போல் முன்னணி தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவும் பத்மபூஷன் விருதை பெற்றுக்கொண்டார். 

Ajith Kumar receiving his Padma Award #AK #AjithKumar 🙌🙌🙌 pic.twitter.com/fcQZ0qihVV

— Aadesh (@aadesh_pranesh) April 28, 2025
  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்! 
  • Continue Reading

    Read Entire Article