ARTICLE AD BOX
நீதிமன்ற விசாரணை – வழக்கு ஒத்திவைப்பு
இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு அன்வி என்ற மகள் தற்போது இருக்கிறார்.
இதையும் படியுங்க: அதே கர்ஜனை.. மூவர்ணக்கொடியுடன் மீண்டும் முடிசூடிய அஜித்குமார்.. வைரலாகும் ‘அந்த வீடியோ’!
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் கடந்த ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள்.இந்த நிலையில், இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி,பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,இருவரும் ஒரே காரில் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும்,சமீபத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது,ஜி.வி. பிரகாஷ் இசையில் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி” மற்றும் தெலுங்கு படமான “ராபின்ஹூட்” ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகா உள்ளன.

7 months ago
63









English (US) ·