ARTICLE AD BOX
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை மக்கள் மத்தியில் கவர வைத்த பங்கு கோபிநாத், பிரியங்கா, மாகாபாவுக்கு உண்டு.
நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம், காமெடி கலாட்டா என மக்களை கவர இவர்களுக்கு பெரிய பங்குண்டு. சமீப கலாமாக விஜய் டிவியை பெரிய நிறுவனம் வாங்கியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
இதையும் படியுங்க: சென்னை புறப்பட்ட விஜய்.. பவுன்சர்களால் கொடைக்கானல் விவசாயிகள் அவதி.!!
இதன் காரணமாக சீனியர் தொகுப்பாளர்களை நிகழ்ச்சியில் இருந்து தூக்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் பரவின. இந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா, விஜய் டிவியில் இருந்து விலகுவதாகவும் தகவல் பரவின.
ஆனால் இதெல்லாம் வதந்தி என ஆர்ஜே ஷா கூறியுளள்ர். பிரியங்கா திருமணமான கையோடு ஹனிமூன் சென்றதால் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனால் கோபிநாத் வேறு சேனலுக்கு செல்வது உறுதியான தகவலில்லை என கூறியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை குறித்து அவர் தொகுத்து வழங்கிய நீயா நானா நிகழ்ச்சி தற்போது வரை ஒளிபரப்பு செய்யப்படவில்லை.

அரசியல் அழுத்தங்களால் அந்த சேனல் ஒளிபரப்பவில்லை என செய்திகள் பரவியது. இதனால் அப்செட்டில் உள்ள கோபிநாத், வேறு ஒரு சேனல் அதிக சம்பளம் கொடுக்க முன்வந்துள்ளதால் விஜய் டிவியில் இருந்து பெரிய சேனலுக்கு தாவ உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இது வதந்தி என ஆர்ஜே ஷா கூறியுள்ளார். நீயா நானா நிகழ்ச்சி ரத்து செய்யப்டபாது, கோபிநாத்தும் ஷோவை விட்டு வெளியேற மாட்டார் என உறுதிபட கூறியுள்ளார்.
