நேற்று காதலன்.. இன்று காதலி.. அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை : பறி போன பிஞ்சு உயிர்!

1 month ago 25
ARTICLE AD BOX

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின் ராகுல் என்ற நர்சிங் கல்லூரி மாணவன் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது, நித்தின் ராகுல் காதலித்து வந்த நரசிங் கல்லூரி மாணவி தரணி என்ற பெண்ணும் 9 மாத கர்ப்பான நிலையில் அவரும் இன்று காலை வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதையும் படியுங்க: தொழிலதிபர்களின் மனைவியை காதல் வலையில் வீழ்த்தி மோசடி… பொள்ளாச்சி சம்பவத்தை கண்முன் நிறுத்திய வாலிபர்!!

இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இரு பிரேதங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நித்தின் ராகுல் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த காவேரி பட்டு பகுதியை சேர்ந்த தரணி என்பவரும் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் உள்ள வியாசா நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர்

ஒன்றாகக சென்று படித்து வந்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு பல நாட்கள் கல்லூரிக்கு செல்லாமல் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்

இதனால் தரணி ஒன்பது மாத 9 மாத கர்ப்பமான நிலையில் நித்தின் ராகுலை தரணி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார். இருவரின் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒன்பது மாத கர்ப்பிணியான தரணி மற்றும் நித்தின் ராகுல் இடையே நேற்று திருமணம் செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனால் மனம் உடைந்த நித்தின் ராகுல் நேற்று இரவு பெரியங்குப்பம் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே வழித்தடத்தில் செல்லும் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை அறிந்த கல்லூரி மாணவி தரணி இன்று காலை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே சென்னை பெங்களூர் செல்லும் ரயில்வே வழியில் செல்லும் ரயிலில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Pregnant student commits suicide by jumping in front of train.. 3 lives lost!

கல்லூரி படிக்கும் போது திருமணத்திற்கு முன்பாக நர்சிங் கல்லூரி மாணவி கர்ப்பமாகி இருவரின் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அடுத்தடுத்து காதலர்கள் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து பிஞ்சு குழந்தையும் உயிரிழந்ததால் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

  • tamilnadu government reduced the local body entertainment tax தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் திரையரங்கின் டிக்கெட் விலை குறையுமா? இது செம மேட்டரா இருக்கே!
  • Continue Reading

    Read Entire Article