ARTICLE AD BOX
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 26 பேர் மரணம் அடைந்தது, அதன் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சம்பவங்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருப்பதி மலையில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
இதையும் படியுங்க: நான் 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. என்னால முடியும்.. உங்களுக்கென்ன? வனிதா அதிரடி!
இதன் ஒரு பகுதியாக திருப்பதி மலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் முன் எப்போதும் இல்லாத வகையில் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
பக்தர்களின் உடைமைகளும் அதேபோல் தீவிரமாக சோதிக்கப்படுகிறது. திருப்பதி மலை பாதை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் பணியாளர்களை நியமித்து பக்தர்களின் வாகனங்கள், உடமைகள் ஆகியவை சோதனை செய்யப்படுகின்றன.

அதேபோல் திருப்பதி மலையில் பக்தர்கள் கூடும் முக்கிய இடங்கள், முக்கிய சந்திப்புகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு பணியில் தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர்,போலீசார் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
