பக்கத்து வீட்டு 13 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை… தாலி கட்டி குடும்பம் நடத்திய இளைஞர்!

3 weeks ago 33
ARTICLE AD BOX

கோவை அடுத்து சூலூர் பகுதியில் உள்ள பஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் தொழிலாளர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் தங்களது 13 வயது மகளுடன் அங்கு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்து உள்ளனர்.

இதற்கு இடையே கடந்த சில நாட்களாக மகளைக் காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர். பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் வீட்டின் அருகே வசித்து வந்த மில் தொழிலாளி ராபர்ட் கிளைவ் என்பவரையும் காணவில்லை, என்பது தெரிய வந்தது.

இதையும் படியுங்க: பிரசவத்துக்கு ஒரு நாள் தான் இருக்கு.. காதல் மனைவி கதற கதற துடி துடிக்க கொலை : ஷாக் சம்பவம்!

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் ராபர்ட் கிளை சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நூற்பாளையில் பணியாற்றி வந்ததும் அவருடன் சிறுமி இருப்பதும் தெரிய வந்தது இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர்.

A 13-year-old girl from the neighborhood was kidnapped and raped

இது தொடர்பாக ராபர்ட் கிளைவை பிடித்து விசாரித்தனர். இதில் திருமணமாகாத அவர் சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்று உள்ளார். பின்னர் சிறுமையை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்து விசாரணையில் தெரியவந்தது.

இதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராபர்ட் கிளைவ் போலீஸார் கைது செய்தனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறுமிக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

  • Love for Kayadu.. he composer who shocked the film crew கயாடு மீது காதல்? படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த இசையமைப்பாளர்.. இதெல்லாம் தேவையா?
  • Continue Reading

    Read Entire Article