ARTICLE AD BOX
கேரளாவில், 14 வயது சிறுவனைக் கடத்தி பாலியல் தொல்லை அளித்ததாக 35 வயது பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பாலக்காடு பகுதியில், 35 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார். இவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்தச் சிறுவன் படித்து வரும் அதே பள்ளியில், இவரது பக்கத்து வீட்டில் உள்ள 14 வயது சிறுவனும் படித்து வருகிறார்.
எனவே, சிறுவர்கள் இருவரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வந்தது மட்டுமல்லாமல், இருவரின் குடும்பத்தினரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அந்த வகையில், 14 வயது சிறுவன், 35 வயது பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி வந்து விளையாடியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணிற்கு, அந்தச் சிறுவன் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனால், சிறுவன் தனது வீட்டிற்க்கு வரும்போது எல்லாம் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று 14 வயது பக்கத்து வீட்டுச் சிறுவன் வழக்கம் போல் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால், சிறுவன் பள்ளிக்குச் செல்லவில்லை.

எனவே, இது குறித்து பள்ளிஆசிரியர், அவரது பெற்றோருக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அப்போதுதான், தங்களின் மகன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, தங்களது மகனை பெற்றோர், பள்ளி மற்றும் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ் சினிமா இப்போ ரொம்ப கஷ்டம்.. பா.ரஞ்சித் வேதனையுடன் கூறிய ’நச்’
ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளனர். இவ்வாறு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவனைத் தேடி வந்தனர். இந்த விசாரணையில், பக்கத்து வீட்டுப் பெண், சிறுவனை எர்ணாகுளத்திற்கு கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்தப் பெண் சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, போலீசார் அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
