ARTICLE AD BOX
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருப்பூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திருப்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளோம். தொகுதி மறுவரையறை குறித்த வழிமுறைகள் அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பே, அது குறித்து தவறாகப் புரிந்து கொண்டு, கற்பனையான மற்றும் தவறான தகவலை பரப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.
தொகுதி மறுவரையறை என்பது, விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்திவுள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்ட போதும், இதேபோல் பொய்களை பரப்பினர். ஆனால், அவை அனைத்தும் உடைத்தெறியப்பட்ட பின்னரும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
எவ்வளவு மக்கள் தொகையோ, அவ்வளவே உரிமைகள் என திமுக இடம் பெற்றுள்ள INDIA கூட்டணி பிரசாரம் செய்தபோது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை திறம்படச் செயல்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்படுமென குரல் கொடுத்தவர் பிரதமர் மோடி“ எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, சீமான் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி காவல் துறையினர் நடந்து கொண்ட விதம் சரியில்லை என கண்டனம் தெரிவித்தார். அதோடு, சீமான் ஆஜராகவில்லை என்றால்தான் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மூத்த நடிகைகள் தான் வேணும்… அடம் பிடிக்கும் இளம் நடிகர் : கதறும் தயாரிப்பாளர்கள்!
தொடர்ந்து, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக உடன் கூட்டணி அமைக்காமல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நிற்கும் என பிரசாந்த் கிஷோர் கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்கு, அது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் என அண்ணாமலை பதிலளித்தார்.
