பஜ்ஜி, பிஸ்கட் எல்லாம் சாப்டட்டும்.. தேவையற்ற நாடகம்… விளாசிய அண்ணாமலை!

1 month ago 36
ARTICLE AD BOX

தமிழக உரிமைகளைப் பறிக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்களையே இங்கு வரவழைத்து தேவையற்ற கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறையைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து, மாநில உரிமைகளை தமிழக முதலமைச்சர் பேண வலியுறுத்தி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் கருப்புக் கொடி போராட்டத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர்.

இதன்படி, சென்னை பனையூரில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, “தமிழகத்துக்கு அண்டை மாநிலங்களுடன் தீர்க்கப்படாத நீண்ட கால பிரச்னைகள் உள்ளன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், கேரள மாநிலத்தோடு முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, செண்பகவல்லி அணை பிரச்னை, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் பிரச்னை ஆகியவை உள்ளன.

கர்நடாக அரசுடன் நீண்ட காலமாக காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை உள்ளது. அதோடு, யார் அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என்று அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் சவால் விடுத்துள்ளார். அதேபோல், பந்திப்பூர் பகுதியில் இரவு நேர போக்குவரத்து தடையால் தமிழக மக்கள் சந்திக்கும் இன்னல்கள் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, கர்நாடகாவை ஒட்டிய ஒசூர் வளர்ச்சிக்கான பெங்களூருவின் பொம்மச்சந்திராவுக்கும், தமிழ்நாட்டின் ஓசூருக்கும் இடையேயான மெட்ரோ ரயில் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்படியாக பல்வேறு பிரச்னைகள் அங்கு உள்ளன. இதுவரை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு முறை கேரளா சென்றுள்ளார்.

அவ்வாறு சென்ற அவர், ஒருமுறையாவது மாநில உரிமைகளப் பற்றி பேசியிருக்கிறாரா? பகிரங்கமாக மேகதாது விவகாரத்தில் சவால் விடுத்த டிகே சிவகுமார் இன்று சென்னை வந்துள்ளார். அவரிடம் இந்த விவகாரம் பற்றி ஸ்டாலின் இன்று பேசுவாரா? தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது பற்றி ஸ்டாலின் தொடர்ந்து பொய் பேசி வருகிறார்.

Annamalai

தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் அதை நடத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்று தொடர்ந்து பொய் பேசி வருகிறார் ஸ்டாலின். தெலுங்கானா முதலமைச்சர் இங்கு வந்துள்ளார். அவரது வழியில் ஸ்டாலின் சாதிவாரிக் கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த உத்தரவிடுவாரா? இப்படியாக, தமிழகத்தின் உரிமைகளை பற்றிப் பேசாமல், தமிழக உரிமைகளைப் பறிக்கும் மாநிலங்களின் முதலமைச்சர்களையே இங்கு வரவழைத்து, தேவையற்ற ஒரு கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார்.

இதையும் படிங்க: 25 பவுன் கொடுத்தும் பத்தல.. மனைவி தற்கொலை.. 4 பேருக்கு பேரிடி!

அவர் பிரச்னை இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று சொல்லி ஆலோசனைக் கூட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்துகிறார். அவர் நாடகத்தை நடத்துட்டும். பஜ்ஜி, பிஸ்கட் எல்லாம் சாப்பிடட்டும். கூடவே, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக ஆலோசனையையும் மேற்கொள்ளட்டும்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Nayanthara Threatened his co Star மீனாவை தொடர்ந்து அடுத்த சர்ச்சை.. பிரபல நடிகையை மிரட்டினாரா நயன்தாரா?
  • Continue Reading

    Read Entire Article