பஞ்சுருளி தெய்வத்தின் சாபம்? காந்தாரா படக்குழுவில் மரணித்த மூன்றாவது நபர்! அடக்கொடுமையே…

2 weeks ago 12
ARTICLE AD BOX

காந்தாரா சேப்டர் 1

கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் நடிப்பில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் வேற லெவல் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பஞ்சுருளி என்ற நாட்டார் தெய்வத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கதையம்சத்தில் உருவான இத்திரைப்படம் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போட்டது. 

one more death from kantara chapter 1 movie crew

காந்தாரா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக  “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திலும் ரிஷப் ஷெட்டியே நடித்து வருகிறார். “காந்தாரா” முதல் பாகத்தை ரிஷப் ஷெட்டியே இயக்கியிருந்த நிலையில் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தையும் இவரே இயக்கி வருகிறார்.

தொடர் மரணங்கள்

“காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இப்படத்தில் நடித்த இரண்டு நடிகர்கள் மரணமடைந்தனர். முதலில் இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த ராகேஷ் என்ற நடிகர் ஒரு திருமண நிகழ்வுக்குச் சென்றபோது மாரடைப்பால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து துணை நடிகர் கபில் என்பவர் சௌபர்ணிகா நதியில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். 

இவ்வாறு இத்திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் இரண்டு பேர் மரணமடைந்த நிலையில் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்பட்டது. பஞ்சுருளி தெய்வத்தின் சாபமா? என்று பலரும் பேசத்தொடங்கிவிட்டனர். 

one more death from kantara chapter 1 movie crew

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் பணியாற்றி வந்த மற்றொரு நடிகரும் உயிரிழந்துள்ளார். அதாவது கேரளாவைச் சேர்ந்த விஜூ என்ற நடிகர் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக கர்நாடகாவின் தீர்த்தஹல்லியில் ஆகும்பே என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

one more death from kantara chapter 1 movie crew

உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே இத்திரைப்படத்தில் பணியாற்றிய இரண்டு பேரும் உயிரிழந்த நிலையில் தற்போது மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளது ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது.  

  • one more death from kantara chapter 1 movie crew பஞ்சுருளி தெய்வத்தின் சாபம்? காந்தாரா படக்குழுவில் மரணித்த மூன்றாவது நபர்! அடக்கொடுமையே…
  • Continue Reading

    Read Entire Article