ARTICLE AD BOX
திடீரென வைரல் ஆன பெண்…
கடந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவின் போது அங்கே மாலை விற்ற மோனலிசா என்ற 16 வயது பெண் திடீரென இணையத்தில் வைரல் ஆனார். சொக்க வைக்கும் கண்களையுடைய அவரது அழகான புகைப்படங்கள் இணையத்தில் இளைஞர்களை கவர்ந்திழுக்க பலரும் அவரது புகைப்படங்களை பகிர்ந்து 2024 ஆம் ஆண்டின் வைரல் பெண்ணாக ஆக்கினார்கள்.
இந்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பெண், கும்ப மேளாவில் தனது குடும்பத்துடன் மாலை, ருத்ராட்சை போன்றவற்றை விற்றுவரும் தொழிலை மேற்கொண்டு வந்தார். ஆனால் திடீரென அவரது புகைப்படம் வைரல் ஆன நிலையில் அவருக்கு ரசிகர் கூட்டம் ஒன்று உருவாகியது. அவர் தொழில் செய்யும் இடத்திற்குச் சென்று அவரை பார்ப்பதற்காகவே கூட்டம் கூடியது.
தேடி வந்த பாலிவுட் பட வாய்ப்பு…
இவ்வாறு மோனலிசா இந்தியாவின் வைரல் பெண்ணாக வலம் வர, அவரை தேடி பாலிவுட் பட வாய்ப்பும் வந்தது. இயக்குனர் சனோஜ் மிஸ்ரா என்பவர் தான் இயக்கவுள்ள “டைரி ஆஃப் மணிப்பூர்” என்ற புதிய திரைப்படத்தில் மோனலிசாவை கதாநாயகியாக அறிமுகப்படுத்த முடிவு செய்தார். இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆக, அத்திரைப்படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டது.
பாலியல் வழக்கில் கைது
ஆனால் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கு ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்தது. திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக கூறி அந்த பெண்ணை தனது ஆசைக்கு இணங்கவைத்து ஏமாற்றி உறவு வைத்து வந்ததாக அப்பெண் புகார் அளித்த நிலையில் சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இதனால் மோனலிசாவின் சினிமா வாய்ப்பு பறிபோனது.
மோனலிசாவுக்கு வந்த திடீர் வாய்ப்பு
பட வாய்ப்பு பறிபோனதால் மனம் உடைந்து போனார் மோனலிசா. இந்த நிலையில் அவர் சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக பாலிவுட்டில் இருந்து ஒரு தகவல் கசிகிறது. மிக விரைவிலேயே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கூறப்படுகிறது.
எனினும் மோனலிசா, பல ஊர்களில் பல கடைத் திறப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக வரவேற்கப்பட்டு வருகிறார். இதன் மூலம் அவர் மிகவும் பிசியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.