ARTICLE AD BOX
படுதோல்வியடைந்த படம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்தது. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது.

சுமார் ரூ.200 கோடி மதிப்பில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இப்போது வரை ரூ.160 கோடிகளே வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம். இந்த நிலையில் சல்மான் கான் குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
படத்துல என்ன பிரச்சனை?
அதாவது இத்திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்த நிலையில் நடிகர் சல்மான் கான் இத்திரைப்படத்தை பார்த்த பல ரசிகர்களை அழைத்து ஒரு சந்திப்பு நடத்தினாராம். அச்சந்திப்பில் இந்த படம் எதனால் மக்களுக்கு பிடிக்கவில்லை, படத்தில் என்னென்ன குறைகள் இருந்தன என்று கருத்து கேட்டாராம். இவ்வாறு ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
