ARTICLE AD BOX
கடவுள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார்கள் – ரகு பாபுவின் எச்சரிக்கை!
விஷ்ணு மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் “கண்ணப்பா” திரைப்படம் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி உள்ளது.
இதையும் படியுங்க: நீ யாரு..என்ன கேள்வி கேட்க..செய்தியாளர்களை கடிந்து கொண்ட சல்மான் கான்.!
இப்படத்தில் மோகன்பாபு,சரத்குமார்,கருணாஸ்,பிரீத்தி முகுந்தன்,ரகு பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மேலும், மோகன்லால்,அக்ஷய்குமார், பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர்.ஸ்டீஃபன் தேவஸி இசையமைக்கும் இப்படம் ஏப்ரல் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் ட்ரோல் மீம்கள் உருவாகி வைரலாகின.
இந்த சர்ச்சை குறித்து நடிகர் ரகு பாபு எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியுள்ளது.
அவர் கூறியது “இந்தப் படத்தை யார் ட்ரோல் செய்தாலும்,அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,கடவுள் சிவனின் கோபத்துக்கு ஆளாவார். இது 100% உண்மை” என தெரிவித்துள்ளார்.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 24, 2025இவருடைய கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விவாதப்பொருளாக மாறியுள்ளது.