படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

2 weeks ago 24
ARTICLE AD BOX

மன்னிப்பு கேட்க முடியாது

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியிருந்தது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பலைகளை கிளப்ப கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பிலிம் சேம்பரும் போர்க்கொடி தூக்கியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூற  “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடக மாநிலத்தில் தடை செய்யப்பட்டது.

supreme court said that thug life movie should not be ban for any cause

இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்  “நீங்கள் என்ன மொழியியல் வல்லுநரா?” என்று கேள்வி எழுப்பி “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் போடப்பட்ட தடை நீக்கப்படாது” என கூறியது. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்றம் கேள்வி

இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் போட்ட தடை உத்தரவை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது” என கூறியுள்ளது. மேலும், “உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது. படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” எனவும் கூறியுள்ளது.

supreme court said that thug life movie should not be ban for any cause

“சிலர் பயமுறுத்துவதால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதை ஏற்க முடியாது. நமது வீதிகளை குண்டர்கள் கைப்பற்ற அனுமதிக்க முடியாது” எனவும் கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் இந்த வழக்கில் கர்நாடக அரசு பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!
  • Continue Reading

    Read Entire Article