படத்தோட பட்ஜெட்டே அவ்வளவு கிடையாதே- ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!  

1 month ago 35
ARTICLE AD BOX

சர்ச்சையை கிளப்பிய பாடல்

சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் வருகிற 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதற்கு முன்பு வெளிவந்த “டிடி ரிட்டன்ஸ்” திரைப்படத்தை போலவே இத்திரைப்படமும் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. 

tirupathi board member asking to santhanam compensation for 100 crores

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிஸா 47” என்ற பாடலில் “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்ற வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி இப்பாடலை நீக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் இத்திரைப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும் எனவும் திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் போலீஸில் புகார் அளித்திருந்தனர். 

ரூ.100 கோடி நஷ்டஈடு

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜகவைச் சேர்ந்தவருமான பானுபிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “இது குறித்து சந்தானம் 15 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும். இல்லை என்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு தொடருவோம்” என பானுபிரகாஷ் ரெட்டி கூறியுள்ளார். இச்சம்பவம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

  • tirupathi board member asking to santhanam compensation for 100 crores படத்தோட பட்ஜெட்டே அவ்வளவு கிடையாதே- ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ்!  
  • Continue Reading

    Read Entire Article