ARTICLE AD BOX
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.
தற்போது கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த நடிகை அஸ்வினி பரபரப்பு புகாரை கூறியுள்ளார். ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க வந்த போது அத்துமீறலுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்க : இழுத்து போடு.. சுண்டி இழுக்கும் Tamannah Bhatia போட்டோஸ்..!!
இவர் கொடுத்த பேட்டியில், எப்போதும் அம்மாவுடன் தான் படப்பிடிப்புக்கு செல்வேன், ஒரு முறை அம்மா வரமுடியாததால் நான் படப்பிடிப்புக்கு போகலாமா வேண்டாமா என யோசித்தேன்.
பிறகு அம்மாவே கூறியதால் சென்றேன். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன், இயக்குநர் மேலே கூப்பிடுகிறார் என கூறினார்கள். உடனே மேலே போனேன். அறைக்குள் வர சொல்லி இயக்குநர் அழைத்தார்.
நான் சட்டேன் யோக்சிக்காமல் சென்றுவிட்டேன். அப்போது என்னிடம் அவர் அத்துமீறி நடந்து கொண்டார். இதை நான் சற்றும் எதிர்பாராமல் உடனே கீழே இறங்கி வீட்டிடுக்கு வந்து அழுதேன்.

அம்மாவிடம் கூற, அவரும் அழுதார். ஆனால் நான் ஏன் அம்மாவிடம் இதை சொல்லி அவரை காயப்படுத்திவிட்டோம் என நொந்து போனேன், தற்கொலை செய்து கொள்ள கூட முடிவு செய்தேன் என கூறியுள்ளார்.
அந்த இயக்குநர் யார் என்ன படம், தமிழ் படமா அல்லது வேறு மொழியா என்பது பற்றி அவர் எந்த தகவலையும் சொல்லவில்லை.
