படப்பிடிப்பில் ‘நயன்தாரா’ அட்டூழியம்..கடுப்பான சுந்தர்.சி..மூக்குத்தி அம்மன் 2-ல் சிக்கல்.!

1 month ago 33
ARTICLE AD BOX

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் மாற்றம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த 2020ஆம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம்,ரசிகர்களின் பேராதரவுடன் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

இதையும் படியுங்க: முடிவுக்கு வந்த ‘சுஷாந்த்’ வழக்கு…முக்கிய அறிக்கையை தாக்கல் செய்த CBI.!

இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு வேல்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால்,இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை,அதற்குப் பதிலாக பிரபல இயக்குநர் சுந்தர்.சி இயக்கவுள்ளார் என்று அறிவித்தது .

சில நாட்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக படப்பிடிப்பு பூஜை முடிவடைந்து,படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது காஸ்டியூம் விசியம் தொடர்பாக உதவி இயக்குநருடன் நயன்தாரா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதனால் படப்பிடிப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வால் கோபமடைந்த இயக்குநர் சுந்தர்.சி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும்,மேலும் நயன்தாராவை மாற்றி, கதாநாயகியாக தமன்னாவை தேர்வு செய்யலாம் என தயாரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Mookuthi Amman 2 latest update படப்பிடிப்பில் ‘நயன்தாரா’ அட்டூழியம்..கடுப்பான சுந்தர்.சி..மூக்குத்தி அம்மன் 2-ல் சிக்கல்.!
  • Continue Reading

    Read Entire Article