ARTICLE AD BOX
தக் லைஃப் படத்திற்கு தடை
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் நாளை (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பலைகளை உருவாக்க கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனங்கள் கிளம்பின. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்றமும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறிய நிலையில் கமல்ஹாசன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் விளைவாக கர்நாடகாவில் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
படமே இன்னும் வெளியாகலை, அதுக்குள்ள…
இந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தின் முன்பதிவு கடந்த 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை ரூ.15 கோடிகளுக்கும் மேல் முன்பதிவில் மட்டுமே வசூல் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியாவதற்கு முன்பே “தக் லைஃப்” திரைப்படம் வசூல் வேட்டை நடத்தியுள்ளது கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

5 months ago
46









English (US) ·