ARTICLE AD BOX
நூல்கள் வாசிக்க வேண்டும் – டி.ஜே. ஞானவேல்
கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தென்னிந்திய குறும்பட திருவிழா நடைபெற்றது.இந்த விழா,விஷுவல் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா துறை சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இதையும் படியுங்க: சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து விலகிய தயாரிப்பு நிறுவனம்.. ரஜினி, அஜித்தால் திவால் ஆகிறதா?
இந்த நிகழ்ச்சியில் ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் ‘குடும்பஸ்தன்’ பட இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி,திரைப்படத் தொகுப்பாளர் அணில் கிருஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
மாணவர்கள் மத்தியில் பேசிய டி.ஜே.ஞானவேல் ஒரு திரைப்படத்தை எடுக்க கேமரா மட்டுமே போதாது படைப்பாக்கத்திற்கும் கதை சொல்லும் திறனுக்கும்,ஆழமான அறிவு அவசியம்,அதற்காக குறைந்தது 100 புத்தகங்களை படித்திருக்க வேண்டும்,என்று வலியுறுத்தினார்.
இவர் இயக்கிய ‘ஜெய் பீம்’ படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானாலும்,அது விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது,கடந்த வருடம் இயக்குநர் ஞானவேல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘வேட்டையன்’ படத்தை இயக்கி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.