ARTICLE AD BOX
விஜய் பட தயாரிப்பாளர்
எப்படியாவது இயக்குனராகிவிட வேண்டும் என்ற கனவை சுமந்துகொண்டு அனுதினமும் வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கும் உதவி இயக்குனர்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் சரியான வாய்ப்புகள் அமையாமல் அள்ளாடிக்கொண்டிருக்கும் பல உதவி இயக்குனர்களின் கனவுகளுக்கும் பல இளம் இயக்குனர்களுகளின் கனவுகளுக்கும் கைகொடுக்க முன் வந்துள்ளார் “வாரிசு” படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு.

தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் தில் ராஜு. இவர் தமிழில் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் தெலுங்கில், பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
புதிய முயற்சி
இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு, “தில்ராஜு டிரீம்ஸ்” என்ற புதிய வெப்சைட்டை தொடங்கியுள்ளார். “dilrajudreams.com” என்ற இணைத்தளத்தை உதவி இயக்குனர்களுக்காகவும் இளம் இயக்குனர்களுக்காகவும் தில் ராஜு தொடங்கியுள்ளார்.
எப்படியாவது ஒரு இயக்குனராக ஆகிவிட வேண்டும் என்ற கனவோடு வலம் வரும் உதவி இயக்குனர்களும் இளம் இயக்குனர்களும் இந்த இணையத்தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொண்டு தங்களது பெயர், தாங்கள் எழுதிய ஸ்கிரிப்ட், Pitch Desk உள்ளிட்ட பலவற்றை பதிவேற்றினால் அதனை படித்துவிட்டு அது தகுதியுடையதாக இருக்கும் பட்சத்தில் தில் ராஜுவின் குழு சம்பந்தப்பட்டவர்களை தொடர்புகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட் குறித்து விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தை நடிகர் விஜய் தேவரகொண்டாவும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் துவங்கிவைத்தனர்.