ARTICLE AD BOX
எதிர்ப்புகளை மீறி வெளிவந்த திரைப்படம்
வெற்றிமாறன் தயாரிப்பில் வர்ஷா பரத் என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் “பேட் கேர்ள்”. இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, டீஜே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு பெண் பதின்வயதில் இருந்து இளம் வயது வரை அவளுக்கு ஏற்படுகிற உணர்ச்சிகள், காதல்கள் ஆகியவற்றை பேசுகிறது. இத்திரைப்படத்திற்கு பல பக்கங்களில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

அவ்வாறு பல எதிர்ப்புகளையும் தாண்டி இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன்.
எரிச்சலா வந்தது…
“இந்த படத்தில் ஹீரோயின் ஸ்கூல் படிக்கும்போது அம்மா கதாபாத்திரம் ஹீரோயினிடம், ‘இந்த வயதில் இது போன்ற வேலை எல்லாம் செய்யக்கூடாது, படிக்கிற நேரத்தில் படிக்க வேண்டும், நன்றாக படி, வெளிநாட்டில் செட்டில் ஆகு, அங்கே செட்டில் ஆகிவிட்டு நீ அரை டவுசர் போட்டு யார் கூட வேண்டுமானாலும் சுற்று. உன்னை யார் கேட்கப்போகிறார்கள்’ என அட்வைஸ் செய்கிறார். ஆனால் அந்த பொண்ணோ, ‘நான் படிக்க மாட்டேன், நான் யார் கூட வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சுத்துவேன்’ என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தமோ தெரியவில்லை.

இது போன்ற கதைகள் எல்லாம் பாலிவுட்டில் எப்பவோ எடுத்துவிட்டார்கள். அதுவும் சுவாரஸ்யமாக எடுத்துவிட்டார்கள். ஆனால் இங்கே இப்போதுதான் எடுக்கிறார்கள். அதையும் சுவாரஸ்யமாக எடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் இந்த படம் பார்க்கும்போது பெரிய எரிச்சல் என்னவென்றால், படத்தின் ஒளிப்பதிவுதான்.
படத்தை இருட்டுக்குள்ளயே எடுத்து வைத்திருக்கிறார்கள். அவுட் ஆஃப் ஃபோகஸாக இருக்கிறது. இது என்ன விதமாக மேக்கிங் என்று எனக்கு புரியவில்லை. பெரிய எரிச்சலாகிவிட்டது. மணிரத்னம் படத்தை போல் வசனமும் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த வசனங்களை எல்லாம் பேக்கிரவுண்ட் மியூசிக் ஓவர்டேக் செய்கிறது” என மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
