ARTICLE AD BOX
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் இரண்டு காட்சிகளை நீக்க மத்திய தணிக்கை வாரியம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஆமிர்கான் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்திய தணிக்கை வாரியத்தின் சீராய்வு குழு, தற்போது இத்திரைப்படத்தில் 5 திருத்தங்களை செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

அதாவது, படத்தின் தொடக்கத்தில் வரும் பொறுப்பு துறப்பு வாசகத்தை மாற்றவேண்டும் எனவும் படத்தில் வரும் மைக்கேல் ஜாக்சன் என்ற சொல்லை Love Birds என மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
மேலும் படத்தில் இடம்பெறும் தாமரை என்ற சொல்லை நீக்க வேண்டும் எனவும் படத்தில் இடம்பெற்ற “Business Woman என்ற சொல்லை Business person” என்று மாற்றவேண்டும் என கூறியுள்ளது. குறிப்பாக படத்தின் தொடக்கத்தில் பிரதமரின் மேற்கோள் இடம்பெற வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்றால் இத்திரைப்படம் சிக்கல் இன்றி வெளியாகும் என கூறுகின்றனர்.
