ARTICLE AD BOX
ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை எதிர்நோக்கி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் ஆமிர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் என இருவரின் காம்போவில் இத்திரைப்படம் வெளிவருவதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளது.

5 நிமிடங்களில் விற்றுப்போன பல லட்சம் மதிப்பிலான டிக்கெட்கள்!
வெளிநாடுகளில் “கூலி” திரைப்படத்தின் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் அமைந்துள்ள வெஸ்ட் பிளானோ சினிமார்க் என்ற திரையரங்கில் “கூலி” திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துள்ளன. 3 ஸ்கிரீன்களின் 600க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துள்ளது. இந்த மொத்த டிக்கெட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சமாம். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
