ARTICLE AD BOX
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது.
ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். ராஜஸ்தானை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் அஜித், கமல், சரத்குமார், பிரசாந்த், அர்ஜுன் என முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
பின்னர் வாய்ப்பு இல்லாமல் இருந்த போது கவர்ச்சி சற்று அதிகமாகவே காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக நியூ படத்தில் மார்கண்டேயா பாடலில் ஓவர் கிளாமராக நடனமாடி அதை சென்சார் போர்டே கட் செய்தது.
இதையும் படியுங்க: வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!
இதையடுத்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வந்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா கால கட்டத்தில் பணம் இல்லாமல் கிரண் கஷ்டப்பட்டுள்ளார். பண உதவி வேண்டி தனது நண்பர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ பணம் தருகிறேன், அதற்கு பதில் என்ன தருவாய் என கேட்டுள்ளனர். பணம் வந்தவுடன் தந்துவிடுகிறேன் என கூற, சுற்றி வளைத்து அவர்கள் காசுக்காக கிரணிடம் படுக்கையை பகிர கேட்டுள்ளனர்.

இதைக் கேட்ட ஷாக்கான கிரண், நண்பர்களே இப்படியா என மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் தான் நம்பிய இரண்டு பெரியவர்களும் உல்லாசமாக இருந்தால் பணம் தருவதாக கூறியுள்ளதை கேட்டு நொந்து போனாராம்.
இந்த தகவலை சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
