பட்டப்பகலில் பழிக்குப் பழி.. தலைநகரத்தில் நடந்த கொடூர சம்பவம்! அச்சத்தில் மக்கள்!

2 weeks ago 15
ARTICLE AD BOX

சென்னை, அண்ணா நகரில் பட்டப்பகலில் நடுரோட்டில் ரவுடி ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள அன்னை சத்யா நகர் முதல் தெருவில் வசித்து வருபவர் எட்வின் – பூங்கொடி தம்பதி. இவர்களுக்கு சின்ன ராபர்ட், ஜோசப் மற்றும் மோசஸ் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளனர்.

இவர்களில் ராபர்ட் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை சத்யா நகர் முதல் தெருவில் உள்ள நியூ ஆவடி சந்திப்பில் ராபர்ட் செல்போன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்து வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் ராபர்ட்டை வெட்டி சாய்த்துள்ளனர்

இதில் நிலைகுலைந்த ராபர்ட் தப்பி ஓட முயன்றும் முடியமால் போனதால், அவரை வெட்டி சாய்த்த கும்பல் ராபர்ட்டின் உயிர் பிரிவதை பார்த்தப்படி நின்றுள்ளனர். இது மாலை 6 மணியளவில் நடுரோட்டில் நடந்துள்ளது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

Rowdy Murder in chennai

பழிக்குப் பழி கொலை: இந்த விசாரணையில், ராபர்ட் இருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த ரவுடியான லோகுவுக்கும், கௌசிக்குக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 2019ஆம் ஆண்டு ராபர்ட்டின் நண்பரான கோகுலை, லோகு கும்பல் வெட்டி சாய்த்து உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக லோகு கும்பலை வெட்டி சாய்க்க வேண்டும் என நேரம் பார்த்து காத்திருந்த ராபர்ட்டை, தற்போது ரவுடி லோகு கோஷ்டியினர் வெட்டி உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: எனக்கு 12 வயதில் தங்கச்சி இருக்கா.. வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்த ராஷ்மிகா!

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் பி கேட்டகிரி ரவுடியாக இருந்த ராபர்ட்டை அதிக குற்றச்செயலில் ஈடுபடுவதால், ஏ கேட்டகிரி ரவுடியாக மாற்றி உள்ளனர். ராபர்ட் அன்னை சத்யா நகரில் பல்வேறு குற்றச் செயல்களிலும், தொடர்ந்து கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், ராபர்ட்டை வெட்டிச் சாய்ப்பதற்கு முன்பு, இதே கும்பல் அயனாவரத்தைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ணிடம், அவரது மகன் குறித்து கேட்டுள்ளது. அதற்குஅவர் சரியாக பதிலளிக்காததால், ஆத்திரத்தில் அவரை வெட்டிவிட்டு, அதன் பிறகு நியூ ஆவடி சாலை வந்து அங்கிருந்த ரவுடி ராபர்ட்டை வெட்டிக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • சோபிதா வெளியிட்ட போட்டோ…நாக சைதன்யாவிற்கு இப்படி ஒரு திறமையா.!
  • Continue Reading

    Read Entire Article