பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு! மீரா மிதுனை வளைத்து பிடிக்க உத்தரவு…

3 months ago 33
ARTICLE AD BOX

சர்ச்சை நடிகை

வாயை திறந்தாலே சர்ச்சையாக எதாவது பேசி அடிக்கடி வம்பில் மாட்டிக்கொள்பவர்தான் நடிகை மீரா மிதுன். அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தனது வீடியோ ஒன்றில் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து அவரது பேச்சுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீரா மிதுன் மீதும் அந்த வீடியோவில் அவருடன் இருந்த சாம் அபிஷேக் என்பவர் மீதும் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுனும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறக்கப்பட்டது. ஆனால் மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த நிலையில் மீரா மிதுனின் தாயார் தனது மகளை காணவில்லை எனவும் தனது மகளை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் மனு அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆகஸ்ட்  11 ஆம் தேதி மீரா மிதுனை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது. தலைமறைவான மீரா மிதுன் டெல்லியில் தலைமறைவாக  இருப்பதாக தகவல் கசிந்துள்ள நிலையில் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. 

  • Court orders to arrest Meera Mitun and to make appear before courtபட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கு! மீரா மிதுனை வளைத்து பிடிக்க உத்தரவு…
  • Continue Reading

    Read Entire Article