ARTICLE AD BOX
ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “கங்குவா” படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.சிறுத்தை சிவா இயக்கிய இப்படம் பெரிய வசூல் சாதனை செய்வதாகக் கூறப்பட்டாலும், வசூல் செய்ய முடியாமல் படு தோல்வி அடைந்தது.
இதையும் படியுங்க: முரட்டு சிங்கிள் நடிகருக்கு விரைவில் திருமணம்.. அதுவும் 28 வயது நடிகையுடன்!
இதையடுத்து,இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” என்ற படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகி,மதுரையில் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
ஆனால் இந்தி திணிப்பு எதிர்ப்பு சார்ந்த கதையில் சில மாற்றங்களை கோரியதால்,இயக்குநருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சூர்யா படத்திலிருந்து விலகினார்.தற்போது,அதே கதையை சிவகார்த்திகேயன் நடிப்பதில், “பராசக்தி” என மாற்றி உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில்,கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 44வது படம் “ரெட்ரோ” வருகிற மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
சமீபத்தில்,”ரெட்ரோ” படப்பிடிப்பு தொடர்பான விவகாரம் வெளியாகி, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,அதாவது படப்பிடிப்பு நேரத்தில்,சூர்யா சில காட்சிகளை மாற்றுமாறு கூறியது மட்டுமில்லாமல்,சில காட்சிகளில் நடிக்கவும் மறுத்துள்ளார்,இதனால் படப்பிடிப்பின் போது சிக்கல் ஏற்பட்டுள்ளது அதன் பிறகு சூர்யாவின் நெருங்கிய நண்பர் ஒருவரின் ஆலோசனைக்கு பிறகு தான்,அவர் அந்த காட்சிகளில் நடித்ததாக கூறப்படுகிறது.இந்த தகவலை பிரபல வலைப்பேச்சு பேச்சாளரான பிஸ்மி சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருப்பார்,

8 months ago
90









English (US) ·