ARTICLE AD BOX
பண மோசடி வழக்கில் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் சௌபின் சாஹிரை போலீஸார் கைது செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மரண ஹிட் அடித்த திரைப்படம்
கடந்த 2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து மரண ஹிட் அடித்த திரைப்படம்தான் “மஞ்சும்மல் பாய்ஸ்”. இத்திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.20 கோடி பொருட்செலவில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.200 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்தது. இத்திரைப்படத்தில் சௌபின் சாஹிர், ஸ்ரீநாத் பாசி, தீபக் பரம்போல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய இத்திரைப்படத்தை சௌபின் சாஹிர், பாபு சாஹிர், ஷான் ஆண்டனி ஆகியோர் தயாரித்திருந்தனர்.
பண மோசடி வழக்கு
இந்த நிலையில் லாபத்தில் பங்கு தருவதாக கூறி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷான் ஆண்டனி தன்னிடம் ரூ.7 கோடி பெற்றதாக கேரளாவின் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாக்குளம் கீழமை நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் ஷாம் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்குத் தருவதாக கூறிவிட்டு பங்கு தராமல் தன்னை ஏமாற்றிவிட்டார் எனவும் அப்புகாரில் சிராஜ் குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான ஷாம் ஆண்டனி, சௌபின் சாஹிர், பாபு சாஹிர் ஆகியோரின் மீது கேரளா மரடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சௌபின் சாஹிர் கைது?
இதனை தொடர்ந்து “மஞ்சும்மல் பாயஸ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான சௌபின் சாஹிர், ஷாம் ஆண்டனி, பாபு சாஹிர் ஆகியோர் இவ்வழக்கில் தங்களுக்கு முன்ஜாமின் வழங்கவேண்டும் என எர்ணாக்குளம் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்கள் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கியது.
இதன் அடிப்படையில் மரடு காவல் நிலைய அதிகாரிகள் மூவரையும் விசாரணைக்கு அழைத்து கைது செய்தால் உடனே விடுவித்துவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில் மரடு காவல் நிலையத்தில் மூவரும் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு ஜாமீன் அடிப்படையில் மூவரும் விடுவிக்கப்பட்டார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

3 months ago
42









English (US) ·