ARTICLE AD BOX
பணத்தாசை பிடித்த இளையராஜா!
தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை திரைப்படங்களில் பயன்படுத்தினால் நஷ்டஈடு கேட்பது இளையராஜாவின் வழக்கம். இது அவரின் உரிமைதான் என்றாலும் இது குறித்து அவரை விமர்சிப்பவர்கள் பலர் உண்டு. சமீபத்தில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் அவரது பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த நிலையில் தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக கூறி இளையராஜா ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் பலரும் அவரை “பணத்தாசை பிடித்தவர்” என கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்தியா பாகிஸ்தானுடன் போரில் ஈடுபட்டு வரும் சமயத்தில் இளையராஜா செய்துள்ள காரியம் பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நாட்டுக்காக நிதி…
அதாவது இளையராஜா தனது இசை நிகழ்ச்சிகளின் மூலம் கிடைத்த வருவாயையும் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதன் மூலம் கிடைத்த ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருவதாக கூறியுள்ளார்.
இது குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “வீரம் மிக்க முயற்சிகளால் நமது நாட்டின் துணிச்சலான ஹீரோக்கள் பயங்கரவாதத்தை அழித்தொழிக்கவும் நமது எல்லைகளையும் மக்களையும் காக்கவும் ஒரு பெருமைமிக்க இந்தியனாக மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக எனது இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருவாயையும் ஒரு மாத ஊதியத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு அளிக்க முடிவு செய்துள்ளேன். ஜெய் ஹிந்த்” என பகிர்ந்துள்ளார். இளையராஜாவின் செயல் இந்தியர்கள் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
"VALIANT” – Earlier this year, I composed & recorded my first symphony and named it “Valiant”, unaware that in May our real heroes, our soldiers would need to act with bravery, boldness, courage, precision and determination at the borders to counter the cold blooded killing of…
— Ilaiyaraaja (@ilaiyaraaja) May 10, 2025