ARTICLE AD BOX
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பதற்கு இருக்க வேண்டிய சூழலில் அவருடன் ஒரே ஒரு சிஆர்பிஎஃப் மட்டுமே உள்ளார்.
இதையும் படியுங்க: மனைவி திடீர் மரணம் : கதறி அழுத கவுண்டமணி…!!
மேலும் அவரது பாதுகாப்பிற்காக கேரளாவை சேர்ந்த பவுன்சர்கள் உடன் வருகிறார்கள். இந்த நிலையில் தாண்டிக்குடி பகுதியில் நடைபெற்ற ஜனநாயகன் படப்பிடிப்பின் போது அங்கு அங்கு சென்ற ஊடகவியலாளர்களை நடிகர் விஜயின் பவுன்ஸர்கள் தடுத்து நிறுத்தியதால் சில சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் அவர்கள் மலை மீது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இன்று சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த நடிகர் விஜயுடன் வந்த பவுன்சர்கள் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களை தடுத்து நிறுத்தியதுடன் அவர்களின் பொருள்களை பிடித்து இழுத்ததால் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதனால் வாக்குவாதம் முற்றிப் போய், பவுன்சருக்கு சரமாரி அடி விழுந்தது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் பவுன்சருக்கு சரமாரி அடி!#Trending | #TVKVijay | #bouncers | #MaduraiWelomesTHALAPATHY | #TVK | #ViralVideos pic.twitter.com/9FufWROlOn
— UpdateNews360Tamil (@updatenewstamil) May 5, 2025மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியும் தனியார் பவுன்சர்களை விஜய் பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
