ARTICLE AD BOX
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். 47 வயதாகும் விஷால் இதுவரை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். எங்கு சென்றாலும் அவருடைய திருமணம் எப்போது என கேள்வி கேட்கின்றனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷால், நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைய உள்ளது. இன்னும் 4 மாதங்களில் திறக்க உள்ளோம் என கூறினார்.
மேலும் திருமணத்தை பற்றி கேட்ட போது, நிச்சயம் நடக்கும். நடிகர் சங்க கட்டிடம் திறந்து உடன் எல்லாமே நல்லதாக நடக்கும் என நம்புகிறேன். சீக்கிரம் பத்திரிகையோட வருகிறேன். எல்லாரும் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழாவுக்கு வரவேண்டும் என கூறினார்.
மேலும் திருமணத்திற்காக கார்த்திக எனக்கு பெண் பார்த்துக் கொண்ருக்கிறார். இனி நல் நேரம் தான் என கூறினார். அப்போது சிவக்குமார் சிக்ஸ் பேக்ஸ் வெச்சது சூர்யாதான் என கூறியுள்ளாரே, நீங்கள் சத்யன் படத்தில் வெச்சிங்க என கேட்ட போது, சினிமாவில் முதன் முறையாக சிக்ஸ் பேக்ஸ் வெச்சது தனுஷ் தான்.
வெற்றி மாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்தில் முதன்முதலில் தனுஷ் தான் வைத்தார். பின்னர் நான் சத்யன் படத்திலும், மதகஜராஜா படத்திலும் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருந்தேன் என கூறினார்.

6 months ago
72









English (US) ·