ARTICLE AD BOX
அசரவைக்கும் டிரான்ஸ்ஃபர்மேஷன்
சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு அவரது உருவத்திற்காகவே பலராலும் கேலி செய்யப்பட்டார். தனது உருவம் பருமனாகிவிட்ட நிலையில் தன்னால் ஒரு காட்சியில் ஓட கூட முடியவில்லை என கண்ணீர் விட்டு அழுததாக கூட ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார். எனினும் அதன் பின் “ஈஸ்வரன், “மாநாடு” ஆகிய திரைப்படங்களில் தனது உடல் எடையை குறைத்து சிறுத்தைக்குட்டி போல் கம்பேக் கொடுத்தார் சிம்பு. இந்த நிலையில் வெற்றிமாறன் திரைப்படத்திற்காக சிம்பு மீண்டும் தனது உடல் எடையை 10 கிலோ குறைத்துள்ளதாகவும் அதுவும் பத்தே நாட்களில் குறைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி
வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “வடசென்னை” திரைப்படத்தின் சில கதாபாத்திரங்களையும் சில அம்சங்களையும் சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் பயன்படுத்தவுள்ளார் வெற்றிமாறன். அந்த வகையில் இத்திரைப்படம் “வேர்ல்டு ஆஃப் வடசென்னை” என்று கூறப்படுகிறது. ‘’
இந்த நிலையில் இத்திரைப்படத்திற்காகத்தான் சிம்பு 10 கிலை எடை குறைத்துள்ளாராம். அதுவும் பத்தே நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. தீவிரமான டையட்டுடன் சேர்த்து கடுமையான உடற்பயிற்சியும் செய்ததினால்தான் இவ்வாறு பத்தே நாட்களில் எடை குறைக்க முடிந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.