ARTICLE AD BOX
ஐபிஎல் தொடர் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் நடந்தது. இதில் பெங்களூரு அணி அபாராமாக வெற்றி பெற்றது.
தொடர்ந்து நேற்று இரவு சென்னை அணிக்கும் – மும்பை அணிக்கும் போட்டி நடந்தது. அதில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 156 என்ற இலக்கை கொண்டு விளையாடிய சென்னை 19.1 ஓவரில் இலக்கை எட்டி வென்றது.
இந்த நிலையில் பந்து வீசும் போது சென்னை அணி டேம்பரிங் செய்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கலீல் அகமது பந்து வீசும் முன்னர், பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை ருதுராஜ் கையில் கொடுத்துள்ளார். அதை மறைத்து தனது பாக்கெட்டில் ருதுராஜ் வைத்துக்கொள்வார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, மும்பை ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஐபிஎல் ரசிகர்கள் சென்னை அணியை வசைபாடி வருகின்றனர். பால் டேம்பரிங் செய்ததாக கருத்து தெரிவித்துள்ளனர்.
#CSKvsMI #IPL #RCB #MSDhoni #ViratKohli #IPL2025 #MI #RohitSharma #Thala #VigneshPuthur #Chepauk #Khaleel #ruthuraj @prasannalara #Noor #DeepakChahar #SRHvRR pic.twitter.com/OWjYP9KXdN
— ನಕ್ಷತ್ರಿಕ Nakshatrika (@PratiSrishti) March 24, 2025குறிப்பாக தென்னாப்பிரிக்கா – ஆஸி., இடையே நடந்த போட்டியின் போது, பான் கிராப்ட் பந்தை டேம்பரிங் செய்ததாக புகார் கூறப்பட்டு 9 மாத தடையும் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

7 months ago
76









English (US) ·