ARTICLE AD BOX
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேரில் சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கல்யாண் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவை. பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கொடூரமாகவும் குறிவைத்தும் கொன்றனர்.
இதையும் படியுங்க: கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!!
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கும். காஷ்மீரின் நிலைமை எனக்குத் தெரியும் 1986 முதல் 1989 வரை துப்பாக்கிச் சூடு பயிற்சிக்காக நான் அங்கு சென்றேன்.

காஷ்மீரில் தோட்டாக்கள் வெடித்தால், அதன் தாக்கம் நாடு முழுவதும் உணரப்படும் என்பதற்கு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சான்றாகும். காஷ்மீரில் சிறிது காலமாக நிலைமை அமைதியாக இருந்ததால் விடுமுறையில் பலர் சென்றனர்.
மதுசூதன ராவ் குடும்பத்திற்கு நடந்த சம்பவம் இன்னும் நம்பமுடியாததாக உள்ளது. அவர் எந்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்று கேட்டு எந்த கருணையும் இல்லாமல் அவரைக் கொன்றார்கள்.

இந்த சம்பவத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது. நாம் இரக்ககுணமும் , நல்ல எண்ணம்மும் அதிகரித்ததால் இதுபோன்று நடந்துள்ளது. இனி “பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும், அவர்களைத் தேடி தேடி ஒழிக்க வேண்டும்” குடும்பத்தினரிடம் துயரத்தைக் கேட்டு என் இதயம் நொறுங்கியது .
இதேபோல் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த சந்திரமௌலியின் குடும்பத்தினரையும் சந்தித்த பிறகு, மங்களகிரியில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி எல்லாவற்றையும் விரிவாகப் பேசுவேன் என அவர் கூறினார்.

இதில் அமைச்சர்கள் , நாதென்ல மனோகர், ஆனம் ராமநாராயண ரெட்டி, சத்யகுமார் யாதவ், எம்எல்ஏக்கள் சோமிரெட்டி சந்திரமோகன் ரெட்டி, வெங்கடகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
