பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்

2 days ago 4
ARTICLE AD BOX

வாட்டர்மிலன் ஸ்டார்

இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா தர்பூசணியை சாப்பிட்டுக்கொண்டே தனது கம்பெனி ஊழியர்களை போகச்சொல்லி சைகை காட்டுவார். அதனை ரீகிரியேட் செய்து பிரபலமானதால் இவரை வாட்டர்மெலன் ஸ்டார்! என்று அழைக்கின்றனர். 

bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet

இந்த நிலையில் “என் காதலே” என்ற திரைப்படத்தின் பிரஸ் மீட்டில் கலந்துகொண்ட திவாகருக்கும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறுக்க வராதீங்க

அந்த பிரஸ்மீட்டில்  திவாகர், “மிஷ்கின் சார் இன்ஸ்டாகிராமில் நடிப்பவர்களை பார்த்தால் முகத்திலேயே குத்துவேன் என பேசினார். இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவேண்டும்” என பேசிக்கொண்டிருந்த சமயத்தில் பயில்வான் ரங்கநாதன் குறுக்கே புகுந்து கேள்வி கேட்டார். அதற்கு கோபத்தின் உச்சத்திற்கே சென்ற திவாகர், “பிரஸ்மீட்டில் நான் பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் ஊடே வந்து பேசுவது நாகரீகமா? நான் பேசி முடித்தபின்பு வந்து கேளுங்கள். அதுதான் சபை நாகரீகம்” என கூறினார். 

அதற்கு பயில்வான் ரங்கநாதன், “என்னுடைய வேலையை நான் செய்கிறேன். மிஷ்கினை பற்றி ஏன் இங்கு பேசுகிறீர்கள்?” என கேட்டதற்கு, “நான் தவறாக பேசவில்லை. புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றுதான் கூறவந்தேன்” என்றார் திவாகர்.

bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet

அதன் பின் பத்திரிக்கையாளர்களுக்கும் திவாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒரு பத்திரிக்கையாளர், “நீங்கள் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டபோது திவாகர், “நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் பத்திரிக்கை நண்பர்களே, சிறு வயதில் இருந்து நான் நடித்த நாடகப் போட்டிகளில் முதல் பரிசை வென்றிருக்கிறேன். என்னுடைய சான்றுகளை எல்லாம் நான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறேன். இது போன்ற கேள்வி கேட்பது அநாகரீகம். இந்த பத்திரிக்கையாளர் மட்டும் என்ன அவ்வளவு பெரிய ஆளா? 

இவரை விட நான் பெரிய ஆள்தான். நான் படித்த படிப்பு என்னனு தெரியுமா? என்னைய விட இவர் ஒன்னும் பெரிய ஆள் கிடையாது” என்றார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் திவாகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்
  • Continue Reading

    Read Entire Article