ARTICLE AD BOX
ஹைதராபாத்தில் உள்ள பகதூரபூரில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிய தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி அங்கு பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் பற்றி எரிந்து எலும்பு கூடாக உருக்குலைந்தன.
இதையும் படியுங்க: ரஜினியோட அந்த வீடீயோவை ரிலீஸ் பண்ணுங்க..எல்லோரும் பார்க்கட்டும்..ரம்யா கிருஷ்ணன் பர பர பேச்சு.!
குடியிருப்பு பகுதியான அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில் தீ விபத்தில் சிக்கிய லாரிகளின் டயர்கள் வெடித்து சிதறின. இதனால் என்ன நடக்கிறது என்று புரியாமல் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் சுமார் 50 அடி உயரம் வரை கொளுந்து விட்டு எறிந்த தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவத்துவங்கியது. தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த லாரி செட்டில் இதற்கு முன்னரும் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் ஷெட் உரிமையாளர் தேவையான தீயணைப்பு உபகரணங்களை பொருத்தாத காரணத்தால் இந்த இடத்தில் இது தொடர்கதையாக நீடித்து வருகிறது.
எனவே லாரி ஷெட்டை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

8 months ago
73









English (US) ·