ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன் (35).
இவர் கடந்த வருடம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது திண்டுக்கல் இடையபட்டி சேர்ந்த வினோதினி (20) என்பருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன ஒரு வாரத்திற்குள் பார்த்திபன் நடவடிக்கை சரியில்லாததால் வினோதினி கணவனின் செயல்பாட்டை கண்காணித்து வந்தார்.
அதில் பார்த்திபன் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் பல பெண்களிடம் பேசுவது, ஆபாச புகைப்படங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கணவனின் குடும்பத்தாருக்கு ஆதாரங்களுடன் கூறிய போது இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவன் குடும்பத்தார் வினோதினியை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர்.
இது குறித்து வினோதினி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பார்த்திபன் மற்றும் பார்த்திபனின் தாய் கண்ணம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் பார்த்திபன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன்னிவாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு முன் ஜாமின் பெற்று கன்னிவாடி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபனை ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் கைது செய்து திண்டுக்கல் மத்திய கிளை சிறையில் அடைத்தனர்.
தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
