ARTICLE AD BOX
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கீழாண்ட தெருவில் வசித்து வருபவர் முரளி. இவருடைய மகள் தமிழ்ச்செல்வி வயது 17.தமிழ்செல்வியும் அதே பகுதியை சேர்ந்த அபி என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த வருடம் தமிழ்ச்செல்வி 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அபியை திருமணம் செய்து கொண்டார்.
இச்சூழலில் தமிழ்ச்செல்வி அபியின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்செல்வியின் பெற்றோர் மகளுக்கு 18 வயதாகும்வரை எங்களோடு இருக்கட்டும் என தங்கள் வீட்டுக்கு தமிழ்ச்செல்வியை அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சூழலில் தமிழ்ச்செல்வி படுக்கை அறையில் உள் தாழ்பாளிட்டு சீலிங் ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் இருந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் தமிழ்செல்வியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
