ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்தவர் சந்தானகுமார் 31. கடடிட மேஸ்திரி. இவர் 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்தார்.
இதையும் படியுங்க: மூட்டை மூட்டையாக காலாவதியான மருந்துகள்… கோவை 15வது வார்டில் மர்மம்? காங்., கவுன்சிலர் பரபரப்பு புகார்!
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை 2017 அன்று கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சந்தானகுமாரை கைது செய்து போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுதா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 10 ஆணடுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கடத்திய குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார்.