ARTICLE AD BOX
வங்கதேசம் டாக்கா பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் பலியாகியுள்ளதாக தகவல்
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள மைல்கல் பள்ளியின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச நாட்டின் விமானப்படைக்குச் சொந்தமான F7 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயத்தில் விமானம் தனது கட்டுப்பட்டை இழந்து பள்ளியின் மேல் விழுந்து நொறுங்கியது. இதனால் பள்ளி வளாகத்தில் தீ பரவியது.

விபத்து நடந்த பள்ளி வளாகத்தில் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் முதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 4 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எட்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
