ARTICLE AD BOX
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் (52) – சங்கீதா (45) தம்பதி. முன்னதாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வேலை பார்த்து வந்த கிருஷ்ணகுமார், தற்போது மனைவி மற்றும் மகள்களுடன் பட்டணம்புதூரில் வசித்து வந்தார்.
மேலும், கிருஷ்ணகுமாரின் மனைவி சங்கீதா, சிவானந்தா காலனியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உள்ள நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே சங்கீதாவுக்கு, மருத்துவர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், அவருடன் நெருங்கிப் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தம்பதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் மகள்கள் இருவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது, இந்த பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி சங்கீதாவைச் சுட்டுள்ளார். இதில் சங்கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர், கிருஷ்ணகுமார் அங்கிருந்து காரில் புறப்பட்டு, தனது சொந்த ஊரான கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள வண்டாழி மங்களம் டேம் பகுதியில் இருக்கும் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: காதலியின் தாயோடு காதலன் செய்த அதிர்ச்சி சம்பவம்.. கண்ணிமைக்கும் நொடியில் நடந்தது என்ன?
அங்கு தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார், சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதேநேரம், பாலக்காடு மாவட்ட போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8 months ago
91









English (US) ·