பவள விழா நடத்த ஆசைப்பட்டேன்.. அப்போது நான் இல்லை.. மேடையில் கண்கலங்கிய செந்தில் பாலாஜி!!

5 days ago 19
ARTICLE AD BOX

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது இந்த விழாவிற்கு முன்னால் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் எம்எல்ஏக்கள் இளங்கோ சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட மாநகர நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் பங்கேற்றுந்தனர்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது..

17ம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கி பேரூரை ஆற்றி சிறப்பிக்க உள்ளார்.

இந்த விழா நாம் அனைவரும் குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய நம் குடும்ப விழா. 2026சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெறும் எழுச்சி விழா.நான் ஏற்கனவே ஆசைப்பட்டது கழகத்தின் பவள விழாவை நடத்திட வேண்டும் என என் மனது உள்ளூர தீரத ஆவல் இருந்தது.

ஆனால் அந்த சூழ்நிலையில் நான் இல்லாத நிலையில் தற்போது முப்பெரும் விழாவை நடத்துகிறேன் என நான் கேட்டவுடன் கழக தலைவர் அனுமதி கொடுத்தது நான் பெற்ற பேறு..

முப்பெரு விழா என்பது மாநிலம் முழுவதிலும் இருந்து கழக நிர்வாக பெருமக்கள் பங்கேற்பார்கள்.மாற்றுக் கட்சியினர் பார்த்து வியக்கும் வகையில் நம்முடைய பணிகள் இருக்க வேண்டும்.

இந்த முப்பெரும் விழா என்பது நமது முதல்வரின் நான்காண்டு சாதனைகளை பறைசாற்றும் வகையில் அமைய வேண்டும்.தனது ஆட்சித் தலைமை மூலம் இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருக்கும் தலைவரின் புகழைப் பறைசாற்றும் விதமாகவும் இருக்க வேண்டும்.

நம்முடைய முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை கொடுத்துள்ளார் இந்த முப்பெரும் விழாவில் மாபெரும் வெற்றியடைய செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என பேசினார்

  • Kavin kiss movie trailer released now கவினுக்குள்ள இப்படி ஒரு சக்தி இருக்கா? இது என்ன புது கான்செப்ட்டா இருக்கு!
  • Continue Reading

    Read Entire Article