ARTICLE AD BOX
நடிகர்,நடிகைகள்,குழந்தை நட்சத்திரங்கள் தேவை!
தமிழ் திரையுலகில் சமூக அரசியல் சார்ந்த கதைகளை அழுத்தமாக சொல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர் பா.ரஞ்சித்.இவர் கபாலி,காலா,மடோண்ணா,சார்பட்டா பரம்பரை போன்ற பல சமூக விழிப்புணர்வுச் செய்திகளை கொண்டு படங்களை இயக்கியவர்.
இதையும் படியுங்க: எப்ப வறீங்க?..சரமாரியாக கேள்வி கேட்ட ரசிகர்கள்..நொந்து போன ‘மைனா’ பட சூசன்.!
இயக்குநராக மட்டுமல்லாமல், திரைப்படங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.பா.ரஞ்சித் தனது “நீலம் புரொடக்ஷன்” என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தரமான திரைப்படங்களை வழங்கி வருகிறார்.
இதுவரை “ஜே பேபி”,”ப்ளூ ஸ்டார்” “பாட்டில் ராதா” போன்ற சமூக கருத்துக்களை முன்வைக்கும் படங்களை தயாரித்துள்ளார்.தற்போது அவரது நிறுவனத்தில் இருந்து புதிய படம் ஒன்று உருவாக இருக்கிறது.
இந்த புதிய படத்திற்காக நடிகர்,நடிகைகள் மற்றும் குழந்தை நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.நடிகராக ஆசை உள்ள அனைவருக்கும் இது ஒரு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதில் நடிக்க 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 5 முதல் 9 வயதுக்குள் உள்ள குழந்தைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.மேலும்,தேர்விற்காக விண்ணப்பிக்க விரும்புவோர் மாநிறத்துடன் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
— Neelam Productions (@officialneelam) March 24, 2025விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் புகைப்படங்கள்,ஒரு நிமிட கால அளவுள்ள சுய விவர வீடியோ,மற்றும் தொடர்பு கொள்ள மின்னஞ்சல் மற்றும் மொபைல் நம்பரை அனுப்ப வேண்டும்,விண்ணப்பங்களை மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப்பின் மூலம் அனுப்புமாறு X தளத்தில் பதிவிட்டுள்ளார்கள்.