ARTICLE AD BOX
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், பஹல்காம் படுகொலை மூலம் பாகிஸ்தான் மோதலைத் தொடங்கியது. இது நமது நாகரிக வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதல் சம்பவமாகும். இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
இதையும் படியுங்க: இமேஜை டேமேஜ் செய்ய அமலாக்கத்துறை முயற்சி : அமைச்சர் நேரு குற்றச்சாட்டு!
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானை இன்னும் கடுமையாக அடித்து நொறுக்கியிருக்க வேண்டும். பாராளுமன்ற பிரதிநிதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது. ஆனால், அரசு செலவில் பிரதிநிதிகள் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றார்.
