ARTICLE AD BOX
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அபிராமி, திரிஷா உட்பட பலர் நடித்துள்ள படம் தக் லைஃப், ஜூன் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று முன்தினம் ட்ரெய்லர் வெளியானது.
இதையும் படியுங்க: பார்ட்டியில் பிரபல நடிகருடன் ஆர்த்திக்கு நெருக்கம்… ரவி மோகன் பிரிய காரணமே அதுதான் : பிரபலம் பகீர்!
மிரட்டலான காட்சிகளுடன் வெளியான ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்திருந்தனர். வழக்கம் போல கமல்ஹாசன் விருமாண்டி படத்தில் மிச்சம் வைத்தாரோ என்னமோ, மீண்டும் அபிராமியுடன் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், திரிஷாவுடன் கமலுக்கு கள்ளத்தொடர்பு போல காட்சியும் உள்ளதால், தக் லைஃப் ட்ரெய்லர் குறித்து பல மீம்ஸ்கள் பறக்கின்றன.

குறிப்பாக பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்யும் அவரது கணவர் கோபி, ராதிகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பார். இதை வைத்து தக் லைஃப் படத்துக்கு எதிராக மீம்ஸ் பறக்கவிட்டுள்ளனர் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
