ARTICLE AD BOX
ஒரு காலத்தில் டாப் நடிகை
தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்கு “சைஸ் ஜீரோ” என்ற திரைப்படம் வினையாகிப்போனது. அதாவது அத்திரைப்படத்திற்காக அனுஷ்கா தனது உடல் எடையை கூட்டினார். அத்திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதே போல் ஒரு பக்கம் அவரால் தனது எடையை குறைக்க முடியாமல் போனது. இதன் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அனுஷ்கா நடிப்பில் உருவான “காட்டி” திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இதில் அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பரிதாபகரமான வசூல் நிலவரம்
அனுஷ்காவின் “காட்டி” திரைப்படம் ரூ.58 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படமாகும். இத்திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.10 கோடியே வசூலித்துள்ளது. இவ்வாறு அனுஷ்காவின் “காட்டி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்துள்ளது. இது அனுஷ்கா ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.