ARTICLE AD BOX
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.!
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது,சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி கோலிவுட்டில் புது சாதனையை படைத்தது.
இதையும் படியுங்க: ஆண்கள் சுத்த வேஸ்ட்…நானே அதை செய்வேன்…நடிகை கஸ்தூரி பர பர பேச்சு.!
இயக்குனர் ஆதிக்,அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தில் அஜித்தை தரமாக செதுக்கியுள்ளார்,அஜித்தின் மாஸான வசனங்களோடு,பில்லா,தீனா போன்ற எவர் க்ரீன் கெட்டப்களை வைத்து மிரட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட இப்படத்தின் டீசர் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது,இந்த நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் படக்குழுவும் அடுத்தடுத்து மாஸான அப்டேட்களை அதிரடியாக அறிவித்து வருகிறது,அதிலும் குறிப்பாக படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தன்னுடைய X தளத்தில் படம் குறித்த தகவலை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் நிறுவனம் தன்னுடைய X தளத்தில் இன்னும் 30 நாளில் திரைக்கு வர உள்ளது,பாக்ஸ் ஆபிஸ் சம்பவம் உறுதி,விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

7 months ago
82









English (US) ·