பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு.. வன்முறையாக வெடித்த போராட்டம் : போலீஸ் குவிப்பு.!!

4 weeks ago 25
ARTICLE AD BOX

யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கி, அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் வரும் மாதம் 6ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லடாக்கில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. காலை நேரத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சூழ்நிலை தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

அவர்கள் போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்ததோடு, மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கும் தீ வைத்தனர். மேலும், அந்த அலுவலகத்தை கல்வீசிகளால் தாக்கினர்.

இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

  • Famous director dies suddenly of heart attack.. Tragedy in the film industry! பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரைத்துறையில் அடுத்தடுத்து சோகம்!
  • Continue Reading

    Read Entire Article