ARTICLE AD BOX
மேலிடம் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநில பாஜக எம்எல்ஏவாக உள்ளவர் டி ராஜா சிங். அவா தனது பதவியை ராஜினாமா செய்தவாக தெலுங்கானா மாநில பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் ராமச்சந்தர் ராவ் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது. இது எனக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தருகிறது. எனக்கு மட்டுமல்ல, கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள், தலைவர்கள், வாக்காளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் முதல் அரசாங்கத்தை அமைக்கும் வாசிலில் பாஜக நிற்கும் நேரத்தில், இப்படி ஒரு தேர்வை நாம் போகும் திரை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த பதவிக்கு பொறுத்தமான எத்தனையோ தலைவர்கள் உள்ளனர் என கூறியுள்ளார்.
முன்னதாக தெலுங்கானா மாநில பாஜக அடுத்த தலைவராக ராமசந்தர் ராவ் நியமனம் செய்ய உள்ளதாக பாஜக மேலிடம் முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு கூறி பாஜக எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்.